கொரோனா அச்சுறுத்துதலால் இன்று முதல் மார்ச் 31 வரை இந்தியாவில் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ள புதிய விதிமுறைகளின்படி, வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. மேலும், புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.