கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசு மருத்துவர்களைக் கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனைகளை நடத்தி வந்த தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அதனை ஒத்தி வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ‘நாடா’ அமைப்பின் முதன்மை நிர்வாக மேலாளர் நவின் அகர்வால், மிகவும் முக்கியமான ஊக்கமருந்து சோதனைகளுக்கு மட்டும் மருத்துவர்களை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊக்கமருந்து சோதனைகளை மட்டும் பரிசோதிப்போம் என்று கூறிய அவர், மீதமுள்ள வீரர்களின் பரிசோதனைகள் எதுவும் பரிசோதிக்கப்பட மாட்டாது என்றார்.