நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று குறித்த சோதனை செய்யும் வசதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் இயக்குநர் பல்ராம் பார்கவா, காய்ச்சல் வந்தவர்களில் 80 விழுக்காடு மக்கள் சாதாரண குளிர் காய்ச்சலால் இருப்பதாகவும், 20 விழுக்காடு மக்கள் இருமல், சளி, காய்ச்சலுடன் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா என்று சந்தேகிக்கப்படும் 5 விழுக்காடு நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம் என்று கூறிய அவர், இதுவரை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்துள்ளதாகவும், வாரத்திற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய முடியும் என்றும் பார்கவா தெரிவித்துள்ளார்.