செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும், குறிப்பிட்ட சில எலெக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கும் உற்பத்தி அடிப்படையில் ஊக்கநிதி வழங்குவதற்காக 40 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வரும் 5 ஆண்டுகளில் ஒதுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதன் மூலம், 2025ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி வருவாய் திறனை உருவாக்க முடியும் என ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செமிகண்டக்டர்கள், எலெக்ட்ரானிஸ் பாகங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க 3 ஆயிரத்து 285 ரூபாய் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.