கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் ஆய்வகங்கள் 4,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆர்என்ஏ வைரசுகளை கண்டறியும் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான NABL அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க திட்டமிட்டுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அதற்காக சில விதிமுறைகளையும் விதித்துள்ளது.
அதன்படி பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரையின் படியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், உரிய பாதுகாப்புடன் நோயாளிகளின் மாதிரிகளை சேகரிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட பரிசோதனைக்கு 1,500 ரூபாயும், வைரஸ் தொற்றை உறுதி படுத்தும் பரிசோதனைக்கு 3000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச மற்றும் மானிய விலையில் பரிசோதனை மேற்கொள்வதையும் ஊக்கப்படுத்தியுள்ள அவ்வமைப்பு, விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.