கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக, பிரியாங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஒரு நிமிட நீளத்திற்கு ஒடும் அந்த வீடியோவில், கைகளை கிருமிநாசினியை கொண்டு கழுவும் முறை தொடர்பாக செயல் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, குடிமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கி, அதுதொடர்பான விழிப்புணர்வை பரப்ப வேண்டும் எனவும் பிரியாங்கா காந்தி தெரிவித்துள்ளார்.