கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஏர் இந்திய விமானம் ஒன்று நேற்று பிற்பகலில் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
போயிங் 777 என்ற அந்த ஏர் இந்திய விமானம் 12 பணியாளர்களுடையது. அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள், ஆடைகள் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்பதற்காக மத்திய அரசு மேலும் ஒரு விமானத்தை அனுப்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர அனைத்து சர்வதேச விமானங்களையும் இந்தியா மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளது.