செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மார்ச் 31 வரை விடுமுறை, கட்டுப்பாடுகள் அறிவிப்பு ஏன்..? பின்னணி குறித்து புதிய தகவல்கள்

Mar 21, 2020 12:56:22 PM

கொடூரன் கொரோனாவிற்கு சர்வதேசங்களும் பயந்து நடுங்கி நிற்கின்றன. 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டி, ரத்த கண்ணீரை வர வைத்துள்ள கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவுவதால் கொரோனாவை, PANDEMIC என குறிப்பிட்டு, கொடிய தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நம் நாட்டிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் மார்ச் 31 வரை மக்கள் பெருவாரியாக கூடும் இடங்களை மூடுவது என்பது.

இந்த நடவடிக்கையில் பள்ளி, கல்லூரிகள் முதல் வணிகவளாகங்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், கிளப்புகள், ஜிம்கள், விளையாட்டு அரங்குகள் என அனைத்தையும் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.மாநாடுகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுப நிகழ்வுகளை மண்டபங்களில் நடத்தி கொள்ளலாம் என்றும், புதிய நிகழ்வுகளை திட்டமிட கூடாது. அதற்கு மண்டபங்களும் தேதி கொடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில் நாட்டில் உள்ள பல முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மார்ச் 31 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்களுக்கு அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ருத்திர தாண்டவம் ஆடி வரும் கொரோனவை எப்படி 15 நாள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்க முடியும் என்று குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கு கூறப்படும் காரணங்கள்: கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என local transmission முறையில் தான் இந்தியாவில் பரவியது கொரோனா.

social transmission எனப்படும் சமூக தொற்றாக மாறவில்லை என கருதப்படுகிறது. சமூக தொற்று என்பது வெளிநாடுகளில் இருந்து வந்தவருடன் தொடர்பில்லாதவருக்கோ, வெளிநாடுகளுக்கு செல்லாதவருக்கோ வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொற்று பரவுவது ஆகும். சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் social transmission மூலம் கொரோனா பரவியதால் தான் பலத்த உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

அதே போல மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 31 வரையிலான கட்டுப்பாடுகளை அறிவித்தபோது கொரோனா தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதே நிலை தொடர்ந்தால் இந்த மாத இறுதிக்குள் கொரோனா இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விட கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்து எச்சரித்தனர்.

இதனை அடுத்தே கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் இருக்க மக்கள் பரவலாக புழங்கும் இடங்களையும், அதிகம் கூடும் இடங்களையும் மூடி விட உத்தரவிடபட்டுள்ளது. மார்ச் 31 வரை மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கட்டுக்கோப்பாக வீடுகளுக்குள் இருந்தால், கொரோனா அதி தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்திவிட முடியும் என்று யோசித்தே மார்ச் 31 வரையிலான கட்டுப்பாடுகள் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நிலைமை கைமீறி போன பிறகே இது மாதிரியான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுவும் இத்தாலியில் மக்கள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை சரிவர பின்பற்றாததால் தான் சீனாவை விட அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே மார்ச் 31 வரையிலான கட்டுப்பாடுகள் என்பது நமது நலனுக்காகவே முன்னெச்சரிக்கையாக விதிக்கப்பட்டுள்ளது. இதை விடுமுறை என கருதாமல் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கூடுமான வரையில் வீட்டிலேயே இருக்க வேண்டும். பல இடங்களில் பெரியவர்கள் வீட்டில் இருந்து கொண்டு குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்கின்றனர்.

இது விளையாடுவதற்காகவோ, சுற்றுலா செல்லவோ கொடுக்கப்பட்ட விடுமுறையல்ல, கோடிக்கணக்கான மக்களின் உயிர்களோடு கொரோனா விளையாடி விட கூடாது என்பதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறை என்பதை மனதில் நிறுத்துங்கள்.


Advertisement
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு
காரிலிருந்தவாறு ஆதிவாசி இளைஞரை சாலையில் இழுத்துச் சென்ற நபர்கள்...போலீசார் விசாரணை
வாகன தணிக்கையின் போது சிக்கிய ரூ.15 லட்சம் கள்ள நோட்டு - கைது செய்த போலீசார்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement