கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழகம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடிப்பு தொழிலுக்காக ஈரான் சென்ற தமிழகம், குஜராத்தைச் சேர்ந்த 350 மீனவர்கள், கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் கிஷ் தீவில் சிக்கியுள்ளனர். மேலும், 5 தீவுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கிஷ் தீவில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக சிக்கியுள்ள மீனவர்களுக்கு, ஈரானிலுள்ள இந்திய தூதரகம் அரிசி, தண்ணீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை கொடுத்து உதவியதாகவும், தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மீனவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.