சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
நேற்று 3,879 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 73 ரூபாய் உயர்ந்து 3,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 31 ஆயிரத்து 032 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 584 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 900 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.