செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நிர்பயா வழக்கு - கடந்துவந்த பாதை..!

Mar 20, 2020 09:40:12 PM

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் 2012ம் ஆண்டு தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற இளம்பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இரும்புக் கம்பியால் தாக்கி பேருந்திலிருந்து வீசியெறிந்துவிட்டு சென்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் ஒருவன் 3 ஆண்டுகள் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டான். மீதமுள்ள 5 பேரில் ராம்சிங் என்பவன் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள, மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று காலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்சய் குமார், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரது உடல் நலனை சோதித்து மருத்துவர்கள் சான்றளித்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஹேங்மேன் பவன் ஜலாட் காலை 5.30 மணிக்கு, 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றினார்.

விதிகளின் படி அரை மணி நேரம் கழித்து உடல்கள் இறக்கப்பட்டு, நால்வரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குற்றச்செயல் நடைபெற்று 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியறிந்து சிறை வாசலில் திரண்டிருந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திகார் சிறை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தமது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதே மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் மேம்பாட்டை நோக்கிய, சமவாய்ப்பை வழங்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement