பொருளாதார சூழல் மோசமாக உள்ளதால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என இண்டிகோ நிறுவனம் தனது விமானிகளுக்குத் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் பிற நாட்டவருக்கான விசாக்களை ரத்து செய்துவிட்டன. இதனால் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அன்றாடச் செயல்பாட்டுக்கும், ஊதியம் வழங்கவும் தேவையான நிதி இல்லாமல் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் அசிம் மித்ரா, விமானிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், பொருளாதார சூழல் குறிப்பிடத்தக்க அளவு மோசமடைந்துள்ளதாகவும், இந்த மோசமான சரிவில் எந்த நிறுவனமும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த சில நாட்களில் சில கடினமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.