தலைநகர் டெல்லியில் மின்சாரத் தேவை அதிகளவில் உள்ளதால் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு மின்சார விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன.
சராசரியாக 3500 மெகாவாட் மின்சாரத்துக்கு தேவை இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக டெல்லியில் தற்போதைய பருவநிலையால் மின்சார தேவை அதிகரிக்கவில்லை. கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் கொரோனாவால் மூடப்பட்டிருப்பதாலும் பல கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதாலும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
மின் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பயனீட்டாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக BSES yamuna power limited, Tata power limited போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.