கொரோனா அச்சுறுத்தலால் 50 சதவீத அளவுக்கு தேவை குறைந்ததால், ஓலா, உபர் போன்ற கால்டாக்சிகளில், கட்டணம் பெருமளவு சரிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவற்றை பெருமளவு சார்ந்து இயங்கும் கால்டாக்சி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மெரு கால்டாக்சி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையில் சேவை வழங்கி வருகிறது. ஆனாலும் தங்களின் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன சிஇஓ நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார். கால்டாக்சி ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.