மாநிலங்களவைத் தேர்தலில் 37 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 5 மாநிலங்களில் 17 இடங்களுக்கு போட்டி நிலவிவருகிறது.
55 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதும், அதனை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, பீகார், தெலுங்கானா, ஒடிசா, ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஆந்திரா மற்றும் குஜராத் உள்ளிட்ட இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.