கொரோனா அறிகுறி இருப்பவர்களை சொகுசு ஓட்டல்களில் தனிமைப்படுத்தி சிகிச்சைபெற டெல்லியில் கெஜ்ரிவால் அரசு அனுமதியளித்துள்ளது.
இதேபோன்று ஒடிசாவில் ஜிஞ்சர், எம்பயர்ஸ் மற்றும் கலிங்கா அசோகா ஆகிய 3 ஓட்டல்களில் 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தில் அறை எடுத்து கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு இலவசமாக காலை சிற்றுண்டியும் பகல் உணவும் இரவு உணவும் இரண்டு பாட்டில் தண்ணீரும் வழங்கப்படும். ஏராளமான அரசு கட்டடங்களும் இது போன்ற தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
இத்தகைய இடங்களில் தங்கியிருப்போருக்கு சிகிச்சையளிக்க புவனேசுவர் மாநகராட்சி சுகாதார மருத்துவர்களை அனுப்பி வைக்கிறது. 30 மாவட்டங்களில் 540 படுக்கைகள் வசதி இருப்பதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 80 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.