கொடுந் தோற்று நோயான கொரோனாவை உலகுக்கு, அறிமுகப்படுத்திய சீனாவுக்கு, 15 டன் மருந்து பொருட்களை இந்தியா வழங்கி உள்ளது.
இதனை, நாடாளு மன்ற மக்களவையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இதன்படி, சீனாவுக்கு ஒரு லட்சம் முக கவசம், 5 லட்சம் கையுறைகள் மற்றும் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று முரளிதரன் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முரளிதரன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு 15 டன் மருந்து பொருட்கள் அளித்து, உதவி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஹூபேய் சாரிட்டிபிள் நிறுவனத்திடம் இந்தியா, தமது உதவி பொருட்களை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.