கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளால் தெலங்கானாவில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்ட அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கோட்டங்குடத்தை சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும், சவுதி அரேபியாவில் பணிபுரியும் முகம்மது அத்னான் கான் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக நாடுகளின் பயணக் கட்டுப்பாடு காரணமாக மணமகன் திருமணத்தன்று நாடு திரும்ப முடியாமல் போனது. இதனால், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே சடங்குகள் முடிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.