கொரோனா அச்சத்தால் இந்த வாரம் சர்வதேச அளவில் இதுவரை 5 ஆயிரத்து 680 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் 70 சதவிகித சேவைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் ரத்தாகி உள்ளன.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய விமான நிலையங்களின் வருகை மற்றும் புறப்பாடு சேவைகள் இந்தியாவின் கணக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவற்றில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் அதிக அளவில் தடைபட்டுள்ளன. இந்தியாவில் இந்த வாரம் மட்டும் 209 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இத்தாலியின் விமானப் போக்குவரத்து 70 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.