அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்களைக் காவல்துறையினர் கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர்.
அசாமில் கோக்ரஜார் மாவட்டத்தில் பூட்டானுடனான எல்லையில் லியோபானி, உல்தாபானி கால்வாய்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறிகுண்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். தீவிரவாத அமைப்பினர் இந்த ஆயுதங்களைக் கால்வாயில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.