காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையில் சீனா தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பெய்ஜிங்கில் நேற்று சந்தித்தனர். அதன்பின்னர் சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் விவகாரம் பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவும், பாகிஸ்தானும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்டு தலைவர்களுகம் சேர்ந்து விடுத்துள்ள இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாமல் இருப்பதைப் போன்று இந்தியாவின் உள் விவகாரங்களிலும் சீனாவும் இதர உலக நாடுகளும் தலையிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்