மத்திய பிரதேச சட்டமன்றத்தை கூட்டி முதலமைச்சர் கமல் நாத் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கலான மனுவில், கமல் நாத், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேர நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேரின் ராஜினாமாவைத் தொடர்ந்து கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக பாஜக கூறி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கூடிய சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படாமல் வரும் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.