ஜம்முவில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாகம் பக்தர்கள் வருகையை ஒத்திப் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாக அதிகாரி, பக்தர்கள் நிலைமை சீராகும் வரை வருகையை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளார். கோவிலுக்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆராதனைகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.
குகை பாதைகள் மூடப்பட்டுள்ளன.பெரும் குழுக்களாக வரும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 2500 பேருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தனியாக அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.