கொரோனா தொற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனையை முன்னெடுக்க, அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை மாநில அரசுகளின் ஆய்வகங்களில் முதலில் பரிசோதிக்கப்படும். அதில், கொரோனா பாதிப்பு உறுதியானால், புனே ஆய்வகத்திற்கு ரத்த மாதிரிகளை அனுப்பிவைக்கப்பட்டு இறுதிக்கட்ட பரிசோதனை அறிக்கை பெறப்பட்டு, அறிவிக்கப்படும்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையில் தனியார் ஆய்வகங்களையும் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வகையில், நாடு முழுவதும், 60 அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை விரைவில், ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.