கொரோனா தாக்குதலை சரியான முறையில் எதிர்கொள்ள தயாராகவில்லை என்றால் மக்கள் கற்பனைக்கு எட்டாத துயரத்திற்கு ஆளாவார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
கொரானாவின் பாதிப்பால் அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலை சுனாமிக்கு ஒப்பானதாக வர்ணித்துள்ள அவர், கொரோனா தடுப்பு மட்டுமின்றி, அதனால் ஏற்படும் பொருளாதார சீர்கேட்டில் இருந்து தப்பிப்பதற்கான முன்னேற்பாடுகளில் இந்தியா இறங்க வேண்டும் என தாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.ra