கொரோனா வைரஸ் குறித்து எம்பிக்கள் தங்களது தொகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை சுட்டிக்காட்டி, அதை பாதியில் முடிக்க எம்பிக்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, எம்பிக்கள் நாட்டு மக்கள் 130 கோடி பேரின் பிரதிநிதிகள் என்றும், இந்நிலையில் கூட்டத் தொடரை பாதியில் முடிக்கக் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 3ம் தேதி வரை தொடரும் என்று கூறிய மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், துறைமுகங்கள், விமான நிலைய ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.