கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, ஃபோர்டு நிறுவனம், தனது 10 ஆயிரம் இந்திய ஊழியர்களை, வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனோ தொற்றுநோயை தடுக்கும் வகையில், பெரு நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களால் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியுமானால் அதற்கு அனுமதிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்த வகையில், கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள போர்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது ஆலைகளில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை, வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், தனது ஊழியர்களின் அலுவல் ரீதியிலான அனைத்து உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுப் பயணங்களையும், ஃபோர்டு இந்தியா நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஒத்திவைத்துள்ளது.