உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தலுக்கான விதிகளை மீறினால், அவர்களது செல்ஃபோன் தொடர்புகள் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
லக்னோவில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட இருவரிடம் நேரடித் தொடர்பில் இருந்ததாக 11 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் தனித்தனியாக கண்காணிப்பது சாத்தியமில்லை என்பதால் காய்கறி வியாபாரி உள்ளிட்ட அவர்கள் பிற மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் சமுகப் பொறுப்புணர்வுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விதிகளை மீறினால் அவர்களின் செல்போன் எண் மூலமும், அக்கம்பக்கத்தினர் மூலமும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.