மும்பையில் கொரோனா வைரசை தடுக்க குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மும்பையில் உள்ள 35 ஆயிரம் குடியிருப்போர் நல சங்கங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடியிருப்பு வளாகங்கள் சுத்திகரிப்பு, வளாக வசதிகள், சேவைகளை மூடுதல், கொண்டாட்டங்களை தவிர்ப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள், லிஃப்டுகளில் சானிடைசர்கள் நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்ட்டுள்ளன. தொடக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் நிலைமையைப் புரிந்துகொண்டு ஆதரவளித்ததாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
வெளிநபர்களை தடுத்தல், உணவு வினியோக நபர்களை தரைத் தளத்திலேயே நிறுத்தி குடியிருப்புவாசிகள் கீழே வந்து பெறச் செய்தல், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன