மகாராஷ்ட்ராவில் முடித்திருத்தம் செய்யும் பார்லர்களில் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்கள் மருத்துவ சான்றிதழ் கேட்டு பெறுவதுடன், காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.
முடித்திருத்தம், சவரம் போன்ற பணிகளின் போது வாடிக்கையாளர்களிடம் பணியாளர்கள் நெருங்கி நிற்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்களுக்கு எளிதாக வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் அதனை கணக்கிட்டு கடைக்கு வரும் வாடிக்கையாளருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவ சான்றிதழ் கேட்கப்படுகின்றன.
ஒரு சில கடைகளில் கடந்த 14 நாட்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் கேட்டு அறியப்படுகின்றன. இதேபோன்று ஒரு சில பார்லர்கள், தங்களது ஊழியர்களுக்கு கைஉறை, முககவசம் ஆகியவற்றை வழங்குவதுடன், மருத்துவ காப்பீடும் செய்து கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.