கொரோனா அச்சுறுத்தலால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், கொரோனாவால் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றார். கொரோனாவால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கான பல திட்டங்களை ரிசர்வ் வங்கி வைத்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கொரானாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்களை குறைப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். டாலர் ஏல விற்பனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, சந்தைப் பொருளாதாரம் மேம்படுத்தப்டும் என அவர் கூறினார்.