டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் மோசடிகளைக் குறைப்பதற்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பயனாளர்கள் இந்த வசதியை மேம்படுத்துவதற்கும் அட்டை பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில் டெபிட்,கிரெடிட் கார்டுகளின் தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தவும், கார்டுகள் வழங்கும்போது மறு வெளியீடு செய்கையில், இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் pos டெர்மினல்களில் உள்நாட்டு அட்டை பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்குமாறும், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளில் வரம்பை நிர்ணையம் செய்து கொள்ளும் வகையில் செயல்படுத்த. வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், இந்த புதிய சேவைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன்’ பரிவர்த்தனை, வெளிநாட்டு பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் தேவை எனில், வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக வங்கியை தொடர்பு கொண்டு தனியே விண்ணப்பிக்க வேண்டும். இந்த சேவைகள் இயல்பாக கார்டில் இடம்பெற்றிருக்காது.
வாடிக்கையாளர் கார்டை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால், வங்கியிடம் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதன் தன்மைக்கேற்ப வங்கிகள், தற்போதைய கார்டை ரத்து செய்து, புதிதாக விண்ணப்பம் பெறப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் இதுவரைஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டை பயன்படுத்தியது இல்லை எனில், அந்த வசதியை செயலிழக்க செய்யும் உரிமை வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.கார்டில் குறிப்பிட்ட வசதியை பெற அல்லது செயலிழக்க வைக்கவும் வாடிக்கையாளர்கள் விருப்பத்ததை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.