கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, Bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், ஐரோப்பிய மையம் மூலம் பெறப்படுகிறது. அமெரிக்க குடிமக்களுக்கு COVID-19 டிராக்கரை கூகுள் அறிவிக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்குள்ளாக, தற்போது மைக்ரோசாப்ட்டின் பிங் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.