கொரானாவுக்குச் சிகிச்சை பெற்ற வார்டு சொகுசு விடுதிக்கு இணையானது எனக் குணமடைந்து திரும்பியவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரானா தொற்று இருப்பதாக முதன்முதலில் கண்டறியப்பட்ட ரோகித் தத்தா சப்தர்ஜங் மருத்துவமனையின் தனிமை வார்டில் 14 நாள் சிகிச்சைக்குப் பின் முழுவதும் குணமாகி வீட்டுக்குச் சென்றார்.
அவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் உள்ளவர்களுடன் வீடியோ அழைப்பில் பேசி வந்ததாலும், இணையத்தொலைக்காட்சி வசதி இருந்ததாலும் தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை எனத் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை நட்சத்திர விடுதிக்கு இணையாக இருக்கும் எனத் தான் இதற்குமுன் கற்பனை செய்து பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஊழியர்கள் நாள்தோறும் இருமுறை தரையைத் துடைத்ததாகவும், படுக்கை விரிப்புகளை மாற்றியதாகவும் குறிப்பிட்டார். இதற்கெல்லாம் மேலாக ஹோலியன்று அமைச்சர் ஹர்சவர்த்தன் தொலைபேசியில் நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.