பாதுகாக்கப்பட்ட இடங்களை சுற்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பான சட்டத்தை, மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்துள்ளார்.
பழங்கால நினைவு சின்னங்கள் மற்றும் தொல்லியல்துறை சட்டத்தின் படி, வரலாற்று சின்னங்களை சுற்றி புதிய கட்டிடங்களை கட்ட பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த நெறிமுறைகளால் பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வளர்ச்சி தடைபடுவதால், அந்த கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரஹலாத் படேல் கூறியுள்ளார். இதுதொடர்பான, சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.