உத்தரப்பிரதேச முதலமைச்சராக 3ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர் என்ற சாதனையை யோகி ஆதித்யநாத் படைக்க உள்ளார்.
மாநிலத்தின் 21வது முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 19ந்தேதி அன்று பதவியேற்றார். இன்னும் 3 தினங்களில் அவர் முதலமைச்சர் பொறுப்பேற்று 3ஆண்டுகள் நிறைவடைய உள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநிலத்தின் முதலமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண்சிங், ராஜ்நாத்சிங் மற்றும் ராம் பிரகாஷ் குப்தா ஆகியோர் பதவி வகித்துள்ளனர். ஆனால் இவர்களில் யாரும் தொடர்ந்து 3ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.