பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் அனில் முகிம், கொரானா தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, குழந்தைகள் மையம் அனைத்தும் மார்ச் 16 முதல் 29 வரை மூடப்படும் என்றார்.
கற்றல் - கற்பித்தல் பணிகள் நடைபெறாத அதே நேரத்தில், ஆசிரியர்களும் அலுவலர்களும் பணியிடத்துக்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் நீச்சல் குளங்களும் மார்ச் 29 வரை மூடப்படும் எனக் குறிப்பிட்டார். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அனில் முகிம் எச்சரித்தார்.