கொரானா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, கோவாவில் சூதாட்ட விடுதிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் நேற்று உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா தியேட்டர்கள், சூதாட்ட விடுதிகள், பொது நீச்சல் குளங்கள் ஆகியவை வரும் 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்தார்.
மேலும், பள்ளி, கல்லூரிகள் 31-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்றும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.