கொரானா வைரசின் அச்சம் காரணமாக முகக் கவசங்கள் அதிக அளவுக்குத் தேவைப்படுவதால், முகக் கவசங்களுக்கான தயாரிப்பில் பல மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
சந்தையில் அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தட்டுப்பாட்டைப் போக்க, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய சிறையில் உள்ள கைதிகள் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கொச்சியில் உள்ள ஒரு கடையில் இரண்டு ரூபாய்க்கு முகக் கவசங்கள் விற்கப்படுகின்றன.
இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் பயன்பெறுகின்றனர். இரண்டு நாட்களில் இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் விற்பனையாகியுள்ளன.