ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த எட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 24 பேர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க அனைத்துத் தரப்புடனும் ஆலோசித்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் மறு சீரமைப்புக்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி காஷ்மீர் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜம்முவின் APNIகட்சியின் தலைவர் புக்காரி தலைமையிலான காஷ்மீர் கட்சிகளின் பிரதிநிதிகள் மோடியுடன் அவருடைய இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புக்காரி, காஷ்மீரில் அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்க பிரதமரிடம் கோரியதாக தெரிவித்தார்.
அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் மோடி காஷ்மீர் தலைவர்களை சந்தித்திருப்பது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.