கொரானா வைரஸ் பரவியுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்டுக்கொண்டு விமானம் மும்பை வர உள்ளதாகவும், மற்றொரு விமானம் இத்தாலிக்கு இந்தியர்களை ஏற்றி வரச் செல்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய நலவாழ்வுத்துறைச் சிறப்புச் செயலாளர் சஞ்சீவ குமார், ஈரானில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் மகான் ஏர் விமானம் இன்று நள்ளிரவு மும்பை வந்து சேரும் எனத் தெரிவித்தார்.
அதுபோல் இத்தாலியில் உள்ள இந்திய மாணவர்களை ஏற்றி வருவதற்காக ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.