பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய பிரதேசத்தில் முக்கிய பாஜக தலைவர்கள், ஆளுநர் லால்ஜி தாண்டனை சந்தித்து பேசினர்.
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே சட்டப்பேரவையை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் கோரி கடிதம் அளித்தனர்.