யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 3 நாட்களில் தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட புதுப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். வங்கி சேவையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அவர்கள் கணக்கில் இருந்து 50000 வரை எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடுகள் மூன்று நாட்களில் தளர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
யெஸ் வங்கி புதிப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 49% வரை முதலீடு செய்யும் எனவும், மற்ற முதலீட்டாளர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து 7 நாட்களுக்குள் நிர்வாக அலுவலகம் கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்படும் எனவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கையகப்படுத்தும் 49% ஒப்பந்தத்தில் யெஸ் வங்கி தற்போதைய ஊழியர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.