கொரானா தொற்று அச்சுறுத்தலை அடுத்து வரும் 16 ஆம் தேதி முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின்போது வழக்கறிஞர்களும், சில முக்கியமான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கறிஞருடன் அவருடைய ஒரேயொரு மனுதாரர் மட்டும் நீதிமன்ற விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.