கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு குவிண்டால் முதல்தரக் கொப்பரைத் தேங்காயின் விலையை ஒன்பதாயிரத்து 920 ரூபாயில் இருந்து பத்தாயிரத்து 300 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகளுக்குக் கூடுதலாக 380 ரூபாய் கிடைக்கும். சராசரித் தரமுள்ள கொப்பரைத் தேங்காய் விலையை ஒன்பதாயிரத்து 521 ரூபாயில் இருந்து ஒன்பதாயிரத்து 960 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனால் விவசாயிகளுக்குக் கூடுதலாக 439 ரூபாய் கிடைக்கும்.