இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தால் டிவிட்டரில் ட்ரெண்டான #Blackfriday ஹேஸ்டேக்
இன்று காலை வர்த்தகம் தொடக்கத்திலேயே இந்திய பங்கு சந்தையில், படு வீழ்ச்சியை சந்தித்தது. வர்த்தகம் தொடங்கி சில நிமிடங்களில், இந்திய பங்கு சந்தைகள் லோவர் சர்கியூட் காரணமாக 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், முதலீட்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது.
இதுகுறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பரவிய ஹேஸ்டேக் #Blackfriday, அதாவது கருப்பு வெள்ளி, என்பது டிவிட்டரில் அதிகளவில் பரவியது. அதில், முதலீட்டாளர்கள் சந்தையில் என்ன நடக்கிறது. இருக்கும் பங்குகளை விற்று விடலாமா? அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க கூட நேரமில்லாமல் படு வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது என டிவீட் செய்துள்ளனர். இதில், சில ட்விட்டுகள் கொரோனா தாக்கத்தினை விட மக்கள் தங்களது முதலீடுகள் கண் முன் நஷ்டமாவதை பார்த்தே இறந்துவிடுவார்கள் என்றும், தாங்கள் பார்க்கும் முதல் லோவர் சர்க்யூட் இது எனவும் கூறியுள்ளனர்.
உண்மையில் இது ஒரு கருப்பு வெள்ளி தினம் தான். இது ஒரு ஸ்டாக் மார்கெட் அல்ல, அது ஸ்டாப் செய்ய வேண்டிய மார்கெட் தான் என்றும் பலவாறு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.மேலும்,முதலீட்டாளர் ஒருவர் தனது பங்குகளை கடந்த மாதத்தில் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்ததாகவும், தற்போது இதன் மதிப்பு 20ரூபாயாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் இந்த மார்ச் 13 அனைவருக்கும் கருப்பு வெள்ளி தான் என இந்திய பங்கு சந்தையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.