ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்துவந்த, 370ஆவது சட்டப்பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், பிரிவினைவாத இயக்கங்களின் நிர்வாகிகள், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவின் அடிப்படையில் பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.