விக்கி லீக்ஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் செல்சியா மானிங்கை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாக உலகளவில் பிரபலமான நிறுவனம் விக்கி லீக்ஸ். இதற்கு ரகசிய தகவல்களை அளித்தாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் செல்சியா மானிங்,கைது செய்யப்பட்டதுடன் 2 லட்சத்து 56 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், செல்சியா சிறையில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பொருட்டு சிறையில் இருந்து அவரை விடுக்க உத்தரவிட்டுள்ள அமெரிக்காவின் வர்ஜீனியா நீதிமன்றம், அதேசமயம் அபாரதத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது.