தெலுங்கானாவில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மும்பையிலிருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த ஆரஞ்சு ( Orange ) நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்தின் குளிர்சாதன கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
ராமச்சந்திராபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிர் தப்பிய நிலையில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.