வங்கி மூலதனம், சேவைகளை கொண்டு வலுவான நிலையில் உள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது
இன்றைய சூழலில் வராக்கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கி குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்து விதமாக, தனியார் வங்கியான, கரூர் வைஸ்யா வங்கி இதனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த 1916ம் ஆண்டில் தொடங்கப்பட்ட எங்கள் வங்கி, சிறந்த மூலதனத்தை கொண்டு லாபகரமாக செயல்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக சேவையாற்றுவதில் உறுதிபட உள்ளோம் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.